Wednesday, 4 December 2013

Tamil PTC Site

 முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி  உங்களின் ஓய்வு நேரத்திலும், முதலீடு இல்லாமலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க இந்த தளம் ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி.


உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இணையம் அளிக்கின்றது. நீங்களும் ஆன்லைனில் பல வழிகளில் விரைவாக பணம் சம்பாதிக்க முடியும்.அதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன.

ஒவ்வொரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இதன் காரணமாக, இணைய தொழில் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் மேலும் தங்களின் வலைதளத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கவர புதிய வழிகளை கையாள்கின்றனர்.


இதை போன்ற நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அதிகமான மக்களை சென்றடைய ptc இணையதளங்களில் தங்களின் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.இதன் மூலம் அவர்களின் விற்பனையை அதிகரிக்க முடிகின்றது.

PTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா? முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள்..


இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.


இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால்,
  • ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை...
  • எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை...
  • தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது...
  • உங்களுக்கு ஆங்கிலம் சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் ...


முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க :








வழிமுறை 1. மேலே உள்ள பட்டனை கிளிக் செய்யவும் .
வழிமுறை2.வலது மேற்புறம் உள்ள "Register" என்பதை கிளிக் செய்யவும்.

நெர்ட்பக்ஸ் PTC இணையதளத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்.

 Fullname :உங்களின் முழுபெயரை உள்ளீடு செய்யவும்.

 Username :நீங்கள் விரும்பும் பெயரை யூசெர் நேமாக உள்ளீடு செய்யவும்

 E-Mail Address :உங்களின் ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும்

 Confirm E-Mail Address :உங்களின் ஈமெயில் முகவரியை உறுதி செய்து கொள்ளவும். 

Password :நீங்கள் விரும்பும் கடவுச்சொல் உள்ளீடு செய்யவும்
 Confirm Password :மீண்டும் ஒருமுறை உங்களின் கடவுசொல்லை உறுதி செய்துகொள்ளவும்
 Referrer :ரெபெர்ரெர் என்பதில் பிடிசிநண்பன் (Ptcnanban)என்பதை எதுவும் எடிட் செய்ய வேண்டாம் அப்படியே விட்டுவிடவும்.

 Payza : உங்களின் ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும்.
 Paypal :உங்களின் ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும்.

பிறகு Register செய்யவும் உங்களின் ஈமெயில் முகவரிக்கு ஒரு Verification லிங்க் அனுப்பப்படும் அதை கிளிக் செய்து  நெர்ட்பக்ஸ் PTC இணையதளத்தில் லாகின் செய்யவும்.

நெர்ட்பக்ஸ் PTC இணையதளத்தில் நான்கு வழிகளில் பணம் சம்பாதிக்கலாம்.

விளம்பரங்களை கிளிக் செய்து சம்பாதிப்பது எப்படி

 EARN MONEY  டேப் VIEW ADS என்பதை கிளிக் செய்யவும்

























அங்கே நீங்கள் கிளிக் செய்ய வேண்டிய விளம்பரங்களை காணலாம்.
ஏதாவது ஒரு விளம்பரத்தை கிளிக் செய்தால் உங்களின் ப்ரௌசெர் புதிய டேப் ஒன்று திறக்கும். உங்களின் விளம்பரம் ஐந்து வினாடிகள் முடியும் வரை காத்திருக்கவும். பிறகு தலை கீழாக இருக்கும் படத்தை கிளிக் செய்யவும்.























அதை போலவே மற்ற எல்லா விளம்பரங்களையும் கிளிக் செய்ய வேண்டும். தற்போது நெர்ட்பக்ஸ் PTC இணையதளத்தில் நூற்றுக்கும் அதிகமான விளம்பரங்கள் உள்ளன. வெறும் விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலமாக மட்டுமே தினசரி $ 0.10 சென்ட் இந்திய ரூபாயின் மதிப்பில் 6 ரூபாய் தினமும் ஐந்து நிமிடங்கள் செலவிடுவதன் மூலமாக சம்பாதிக்கலாம்.


உங்களின் விளம்பரங்கள் லோட் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டால் கூகிள்க்ரோம் (Google Chrome)அல்லது பயர்பாக்ஸ் (Firefox) ப்ரௌசெர்களின் புதிய பதிப்பை உங்களின் கணினியில் இன்ஸ்டால் செய்யவும்.




தனி நபர் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்


விளம்பரத்தின் வகைகள்செலவிடும் நேரம்ஒவ்வொரு விளம்பரத்திற்கும் கொடுக்கப்படும் பண மதிப்பு
நீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள்60 நொடிகள்$0.02
ஸ்டாண்டர்ட் விளம்பரங்கள்30 நொடிகள்$0.01
மினி விளம்பரங்கள்15 நொடிகள்$0.005
மைக்ரோ விளம்பரங்கள்
5 நொடிகள்
$0.001
நிலையான விளம்பரங்கள்
5 நொடிகள்
$0.001
நிர்ணயிக்கப்பட்ட விளம்பரங்கள்
(Self-sponsored)

5 நொடிகள்
$0.001

+

PTSU OFFERS



+

 நேரடிரெபரல் கமிசன்
50% 
 ரெபரல் எண்ணிக்கையின் அளவு
unlimited Direct Referrals 

எண்ணற்ற நேரடி ரெபெர்ரல் 
குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை

$4

 பணம் பெரும் வழிமுறைகள்
பணத்திற்காக காத்திருக்கும் நேரம்

ஒரு சில விநாடிகளில் பணம் வழங்கபடுகின்றது. Instant (within seconds)

 பணம் சம்பாதிக்க ஏற்றுகொள்ளப்படும் நாடுகள்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும்



உங்களுடைய நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கும் உதவலாமே...!

Saturday, 9 March 2013

QR Code Image கணினியில் ஸ்கேன் செய்வது எப்படி

QR Code பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். QR Code என்பது ஒரு ரகசிய குறியீடாகும். இந்த QR Code படத்தினுள் Texts, Links, Phone Numbers, Email Address, vcards ஆகியவைகளை மறைத்து ரகசியமாக மற்றவர்களுக்கு பகிரலாம். சமீபமாக இந்த QR கோடினை பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதில் முக்கியமானவை விளம்பர துறைகள், இணையதளங்கள், மொபைல் மென்பொருள் நிறுவனங்கள் போன்றவைகளாகும்.

இதுவரை  QR கோடினை மொபைல்கள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்தோம். இனி இந்த QR Code படத்தினை நாம் உபயோகிக்கும் விண்டோஸ் கணினியில் எப்படி ஸ்கேன் செய்வது என்று பார்க்கலாம். QR Code Desktop Reader என்ற இலவச மென்பொருள் இந்த வேலையை சுலபமாக செய்கிறது.

உபயோகிப்பது எப்படி:
  • முதலில் இந்த Code Two QR Reader தளத்தில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
  • QR Code Image உங்கள் கணினியில் இருந்தால் From File என்பதை தேர்வு செய்து அந்த படத்தை தேர்வு செய்து கொள்ளவும். 
  • அல்லது QR Code Image ஏதேனும் இணையதளத்தில் இருந்தால் அந்த பக்கத்தை திறந்து கொண்டு இந்த மென்பொருளில் From Screen என்பதை கிளிக் செய்து அந்த QR Code Image ஐ தேர்வு செய்யவும்.
  • QR Code படத்தினை தேர்வு செய்தவுடன் அந்த படத்தில் மறைந்துள்ளதை இந்த மென்பொருள் காண்பிக்கும் அதனை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.
இனி QR Code image களை இந்த முறையில் சுலபமாக ஸ்கேன் செய்து கொள்ளலாம்.
பதிவு பயனுள்ள தாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

QR Code Image கணினியில் ஸ்கேன் செய்வது எப்படி

QR Code பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கலாம். QR Code என்பது ஒரு ரகசிய குறியீடாகும். இந்த QR Code படத்தினுள் Texts, Links, Phone Numbers, Email Address, vcards ஆகியவைகளை மறைத்து ரகசியமாக மற்றவர்களுக்கு பகிரலாம். சமீபமாக இந்த QR கோடினை பல்வேறு துறைகளில் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதில் முக்கியமானவை விளம்பர துறைகள், இணையதளங்கள், மொபைல் மென்பொருள் நிறுவனங்கள் போன்றவைகளாகும்.

இதுவரை  QR கோடினை மொபைல்கள் மற்றும் இணையதளங்களின் உதவியுடன் ஸ்கேன் செய்து வந்தோம். இனி இந்த QR Code படத்தினை நாம் உபயோகிக்கும் விண்டோஸ் கணினியில் எப்படி ஸ்கேன் செய்வது என்று பார்க்கலாம். QR Code Desktop Reader என்ற இலவச மென்பொருள் இந்த வேலையை சுலபமாக செய்கிறது.

உபயோகிப்பது எப்படி:
  • முதலில் இந்த Code Two QR Reader தளத்தில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு மென்பொருளை திறந்து கொள்ளுங்கள்.
  • QR Code Image உங்கள் கணினியில் இருந்தால் From File என்பதை தேர்வு செய்து அந்த படத்தை தேர்வு செய்து கொள்ளவும். 
  • அல்லது QR Code Image ஏதேனும் இணையதளத்தில் இருந்தால் அந்த பக்கத்தை திறந்து கொண்டு இந்த மென்பொருளில் From Screen என்பதை கிளிக் செய்து அந்த QR Code Image ஐ தேர்வு செய்யவும்.
  • QR Code படத்தினை தேர்வு செய்தவுடன் அந்த படத்தில் மறைந்துள்ளதை இந்த மென்பொருள் காண்பிக்கும் அதனை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.
இனி QR Code image களை இந்த முறையில் சுலபமாக ஸ்கேன் செய்து கொள்ளலாம்.
பதிவு பயனுள்ள தாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்

தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) என்பதை பல பேர் கேள்வி பட்டிருப்பீர்கள். RTI என்பது 2005 ல் இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம். இந்த சட்டத்தினால் அரசாங்கத்தை பற்றியோ, அரசாங்க அதிகாரிகளை பற்றியோ ஏதேனும் தகவல் தெரிய வேண்டுமெனில் நீதிமன்றத்தை அணுகி பெற்று கொள்ளலாம். இதில் சில விதி விலக்குகளும், வரம்புகள்  உள்ளன.
இந்த சட்டத்தை பற்றிய விழிப்புணர்வை அனைவரையும் சென்றடையும் நோக்கில் இந்திய அரசு ஆன்லைன் பயிற்சிகள் கொடுத்து அதற்கான சான்றிதழும் வழங்குகிறார்கள்.  7 நாள் மற்றும் 15 நாள் இரு வகை பயிற்சிகள் உள்ளன. இருந்தாலும் 7 நாள் பயிற்சியை முடித்த பின்னரே 15 நாள் பயிற்சியில் சேர முடியும். 
7 நாள் கோர்சில் மொத்தம் 7 பிரிவுகள் இருக்கும் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு கேள்விகள் கேட்கப்படும் அந்த கேள்விகளில் 3 கேள்விகளுக்கு சரியான விடையை கொடுத்தால் தான் அடுத்த பிரிவிற்கு செல்ல முடியும். 
கோர்சில் சேருவதற்கான தகுதிகள்: 
  • இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம்.
  • கணினியில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். 
  • கணினியில் பயர்பாக்ஸ், IE மற்றும் குரோம் உலாவிகளின் லேட்டஸ்ட் வெர்சன் வைத்திருக்க வேண்டும்.
  • கணினியில் PDF Reader மென்பொருள் இருத்தல் அவசியம். 
  • தேர்வுகள் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதால்  படித்து புரிந்து கொள்ளும் அளவு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். 
கோர்சில் சேர்வது எப்படி :
  • இந்த ஆன்லைன் கோர்ஸ்களில் சேர விரும்புபவர்கள் இந்த தளத்திற்கு சென்று Registration செய்ய வேண்டும். 
  • வெற்றிகரமாக பதிவு செய்த பின்னர் உங்களுக்கென ஒரு User Id மற்றும் Password உங்கள் மெயிலுக்கு அனுப்புவார்கள். 
  • அந்த விவரங்களை கொண்டு ஆன்லைன் கோர்ஸ் தளத்தில் நுழைந்து நீங்கள் கோர்ஸ் ஆரம்பித்து விடலாம். 
இதனை பற்றிய மேலும் தகவலுக்கு கீழே உள்ள இணைப்பில் சென்று விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
User Manual for - 7 day Course
User Manual for - 15 day Course

உங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை கணினியில் கையாள இலவச மென்பொருள்

இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் 90 சதவீதம் ஆன்ட்ராய்ட் வகை போன்களே அதிகமாக உள்ளது. குறைந்த விலை ஏராளமான வசதிகள் லட்சகணக்கான இலவச மென்பொருட்கள் போன்ற காரணங்களால் Android போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இன்று Android போன்களை கணினியோடு இணைத்து பல பயனுள்ள வசதிகளை அளிக்கும் ஒரு இலவச மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம்.


SnapPea என்ற இலவச மென்பொருள் மூலம் Android போன்களில் செய்ய கூடிய பல வசதிகளை உங்கள் கணினியின் மூலமாகவே செய்யலாம். இந்த மென்பொருள் மூலம் செய்யகூடிய சில முக்கிய வசதிகளை இங்கு காண்போம்.

சில பயனுள்ள வசதிகள்:
  • உங்கள் கணினியில் உள்ள வீடியோ, போட்டோ மற்றும் பாடல்களை போனுக்கும், போனில் இருந்து கணினிக்கும் பரிமாறி கொள்ளலாம்.
  • போனில் உள்ள தொடர்பு எண்களை(Contacts) கணினியில் சேமிக்கலாம்.
  • லட்சகனக்கனா இலவச மென்பொருட்களை Google Play மற்றும் 1mobile apps தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  
  • கணினி மூலம் மென்பொருட்கள் டவுன்லோட் செய்து கொள்வதால் உங்கள் மொபைல் data plan வீணாகாது.
  • கணினியில் இருந்தே மொபைலில் உள்ள எந்த எண்ணுக்கும் SMS அனுப்பலாம்.
  • உங்களின் iTunes library யை Android போனில் import செய்து கொள்ளலாம். இதிலுள்ள மேலும் பல வசதிகளை காண கீழே உள்ள வீடியோவை காணுங்கள்.

மென்பொருளை டவுன்லோட் செய்ய - SnapPea

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

விண்டோஸ் 8 மென்பொருள் வெளியீடு : உங்கள் கணினியில் அப்டேட் செய்வது எப்படி

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே விண்டோஸ் 8 மென்பொருளை வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். டேப்லெட், ஸ்மார்ட் போன் என்று கணினி மயமாகி கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் இந்த விண்டோஸ் 8 மென்பொருளை கணினிகள் மட்டுமின்றி டேப்லெட் கணினிகளிலும் உபயோகிக்குமாறு அமைத்துள்ளது இதன் சிறப்பு. உலவிகளில் உபயோகிப்பதை போல விண்டோஸ் 8 கணினிகளில் Apps களை உபயோகிக்கலாம் மற்றும் தொடுதிரை(Touch Screen) வசதியும் உள்ளது.


விண்டோஸ் 8 மூன்று விதமான விலைகளில் கிடைக்கிறது. நீங்கள் 2 June 2012 இருந்து 31 January 2013 இடைப்பட்ட நாட்களில் விண்டோஸ் 7 கணினி வாங்கி இருந்தால் கணினியை ரூபாய். 699 செலுத்தி குறைந்த விலையில் விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்து கொள்ளலாம். இடைப்பட்ட நாட்களில் கணினி வாங்க வில்லை எனில் ஆன்லைனில் விண்டோஸ் 8 மென்பொருளை டவுன்லோட் செய்ய ரூபாய் 1,999 செலுத்த வேண்டும். அல்லது DVD யாக பெற விரும்பினால் $69.95 செலுத்தி விண்டோஸ் 8 மென்பொருளை பெற்று கொள்ளலாம்.

அப்டேட் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
  • உங்கள் கணினியை விண்டோஸ் 8 இயங்கு தளத்திற்கு மாற்றி விட்டால் மறுபடியும் பழைய விண்டோஸ் வெர்சனை உபயோகிக்க முடியாது. உபயோகிக்க எண்ணினால் மறுபடியும் பழைய விண்டோஸ் வெர்சனை இன்ஸ்டால் செய்தாக வேண்டும். 
  • விண்டோஸ் 7 கணினியில் இருந்து விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்தால் உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் போன்றவை எதுவும் அழியாது. ஆனால் மற்ற விண்டோஸ் வெர்சன்களில்(XP, Vista) இருந்து அப்டேட் செய்தால் உங்களின் பழைய பைல்கள் அப்படியே இருக்கும். ஆனால் மென்பொருட்களை மறுபடியும் இன்ஸ்டால் செய்தாக வேண்டும். 
  • அப்டேட் செய்வதற்கு முன் விண்டோஸ் 8 மென்பொருளை நிறுவ உங்கள் கணினியில் வசதிகள் உள்ளனவா என இந்த லிங்கில் System Requirements to install Windows 8 சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்.

அப்டேட் செய்வது எப்படி:
  • விண்டோஸ் 8 மென்பொருளை வாங்குவதற்கு முன் இந்த லிங்கில் சென்று Windows Upgrade Assistant என்ற மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணியில் இயக்கவும். .
  • இந்த மென்பொருள் உங்கள் கணினியை ஆராய்ந்து உங்கள் கணினி விண்டோஸ் 8 மென்பொருளுக்கு அப்டேட் செய்ய ஏற்றதா இல்லையா என கண்டறிந்து சில தீர்வுகளை வழங்கும். 
  • ஒருவேளை உங்கள் கணினி விண்டோஸ் 8 மென்பொருளுக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருந்தால் விண்டோஸ் 8 மென்பொருளின் டவுன்லோட் லிங்கும் காண்பிக்கும் அல்லது இந்த லிங்கில் Windows 8 Pro சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 

பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

ஜிமெயிலில் புதிய Compose Window ஆக்டிவேட் செய்ய?

இதுவரை மெயில் டைப் செய்யும் பொழுது மற்ற மெயில்களை பார்க்க வேண்டுமானால் அதை டிராப்டில் சேமித்து இன்பாக்ஸ் பகுதிக்கு வந்து மெயிலை படித்து பின்பு மறுபடியும் ட்ராப்டில் சேமித்து உள்ள மெயிலை திறந்து வேலையை தொடர வேண்டும் இதனால் உங்களுடைய பொன்னான நேரம் தான் விரயம் ஆகும்.

ஜிமெயிலில் வாசகர்களுக்காக புதிய வகையில் Compose விண்டோ உருவாக்கி இருக்கிறார்கள். இந்த புதிய compose விண்டோ chat box போன்றே இருக்கும் இதன் மூலம் நாம் ஏதேனும் ஈமெயில் டைப் செய்து கொண்டிருக்கும் பொழுதே மற்ற மெயில்களை ஓபன் செய்து பார்க்கலாம் அல்லது ஏதேனும் புதிய மெயில் வந்தால் உடனே அறிந்து கொள்ளலாம். மற்றும் ஒரே நேரத்தில் நிறைய compose விண்டோ திறந்து கொள்ள முடியும். இந்த புதிய வசதியினால் வீணாகும் நேரத்தை சேமிக்க முடியும். மேலும் அறிய இங்கு செல்லுங்கள்.


இந்த புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய :
  • உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Compose பட்டனை அழுத்துங்கள். 
  • உங்களுக்கு ஒரு புதிய விண்டோ வரும் அப்படி வரவில்லை எனில் compose பகுதியில் உள்ள new compose experience என்பதை கிளிக் செய்யவும். 
  • அடுத்து கீழே இருப்பதை போல ஒரு கருமை நிற விண்டோ வரும் அதில் உள்ள Got it என்ற பட்டனை அழுத்துங்கள். 
  • Got It பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு புதிய compose pop-up விண்டோ வந்திருக்கும். 
இனி மற்ற மெயில்களை பார்த்து கொண்டே மற்றவர்களுக்கு ஈமெயில் அனுப்பலாம். ஒருவேளை இந்த புதிய compose விண்டோ பிடிக்கவில்லை எனில் மறுபடியும் பழைய compose விண்டோ வர வைக்க கீழே படத்தில் காட்டப்பட்டுள்ள அம்பு குறி மீதி கிளிக் செய்து அதில் வரும் Switch back to old Compose என்பதை கிளிக் செய்தால் பழைய ஸ்டைலுக்கு மாறிவிடும்.
இந்த தகவல் பிடித்து இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

கணினி மிக விரைவாக தொடங்க



நம்முடைய கணினி எவ்வாறு செயல்படுகிறது என்பதை கணினி தொடங்கும் நேரத்தை கொண்டே அளவிட முடியும். நம்முடைய கணினியில் அளவுக்கதிமான புரோகிராம்கள் நிறுவப்பட்டாலும், அல்லது கணினி வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருந்தாலும் கணினி மெதுவாக செயல்பட தொடங்கும் இதனை நாம் கணினி தொடங்கும் நேரத்தை கொண்டே கணக்கிட்டு கொள்ள முடியும். நம்முடைய கணினியிலும் நம் நண்பருடைய கணினியிலும் ஒரே ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் தான் நிறுவியிருப்போம். ஆனால் நம்முடைய கணினி தொடங்கும் நேரத்தை விட நண்பருடைய கணினி மிக விரைவாக தொடங்கும். நமக்கு ஆச்சர்யமாக இருக்கும் இதற்கு என்ன காரணம் நம்முடைய கணினியில் உள்ள வன்பொருள்களைவிட, நண்பருடைய கணினியில் இருக்கும் வன்பொருள்கள் அதிக மதிப்புடையதாக இருக்கும். ஆனால் இதற்கு இதுமட்டும் காரணமில்லை நம்முடைய கணினியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்கள், கணிப்பொறியில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும்  ஹார்ட்டிஸ்க் முறைப்படுத்தபடாமல் இருத்தல் போன்றவை ஆகும். சரி நம்முடைய கணினியை விட நம் நண்பருடைய கணினி எவ்வளவு வேகமாக தொடங்குகிறது என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள ஒரு மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும், பின் Start என்ற பொத்தானை அழுத்தவும் கணிப்பொறியை ரீஸ்டார்ட் செய்யுமாறு ஒரு செய்தி வரும், உடனே கணினியை ரீஸ்டார்ட் செய்து கொள்ளவும். உங்களுடைய கணினி மறுதொடக்கம் ஆனவுடன். எவ்வளவு நேரத்தில் தொடங்கியது என்ற செய்தி தோன்றும். 



குறைந்தபட்சம் 1நிமிடத்தில் கணினி தொடங்க வேண்டும். இல்லையெனில் கணிப்பொறியில் ஏதேனும் குறைபாடுகள் இருக்க வேண்டும். இவ்வாறு கணினி தொடங்கும் நேரத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்கள் தொடங்கும் நேரத்தை எளிமையாக கணக்கிட முடியும்.

ஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு

இந்தியாவின்  பிரபல வங்கியான ஐசிஐசிஐ தற்பொழுது புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு சேவையை துவங்கி உள்ளது. இதற்கு B2 Digital Banking என்று பெயர் வைத்துள்ளனர். இந்த ஆன்லைன் வங்கி கணக்கின் மூலம் ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்வது மட்டுமின்றி மின்சாரம், தொலைபேசி போன்றவைகளுக்காண பில் தொகையும் செலுத்த முடியும். மற்றும் இந்த சேமிப்பு கணக்கில் நீங்கள் வைத்திருக்கும் தொகைக்கு வருடத்திற்கு 3.5% என்ற வட்டி விகிதத்தில் கூடுதல் பணமும் கிடைக்கும்.

இந்த B2 ஆன்லைன் கணக்கை துவங்க நீங்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை மற்றும் zero balance-ல் கணக்கை தொடர முடியும்.  மற்றும் எந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை. இந்த வங்கி கணக்கு தற்பொழுது சென்னை உட்பட சில இந்திய நகரங்களில் இருப்பவர்கள் மட்டுமே பெற முடியும்.

வழிமுறைகள்:
  • B2 ஆன்லைன் சேமிப்பு வங்கி கணக்கு வேண்டுவோர் இந்த லிங்கில் சென்று Apply here என்ற படிவத்தை பூர்த்தி செய்து வங்கிக்கு அனுப்பவும். 
  • பிறகு படிவத்தில் கொடுத்த ID Proof, Address Proof மற்றும் ஒரு கலர் போட்டோ வை வைத்திருக்கவும்.  
  • மூன்று நாட்களுக்குள் வங்கி நபர் உங்களை தொடர்பு கொண்டு இவைகளை பெற்று கொள்வார்கள்.
  • பின்பு உங்கள் கணக்கு தயாரானவுடன் ஈமெயில் மற்றும் SMS மூலமாக உங்களுக்கு தகவல் அனுப்புவார்கள். 
  • மற்றும் உங்கள் கணக்கின் Secret card உங்கள் முகவரிக்கு அஞ்சலில் அனுப்புவார்கள். அதன் மூலம் நீங்கள் B2 ஆன்லைன் கணக்கை ஆக்டிவேட் செய்து கொண்டு உபயோகித்து கொள்ளலாம். 
மேலும் ஏதேனும் தகவல் வேண்டுவோர் இங்கு சென்று பார்த்து கொள்ளவும்.

(Thanks)

கூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி?

பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்களை பரிமாறி கொள்ள உதவுவது பேஸ்புக் குரூப் வசதியாகும்.
தற்பொழுது இந்த குரூப் வசதி கூகுள் பிளஸ் சமூக இணையதளத்திலும் அறிமுக படுத்தி உள்ளனர். Community என்று பெயரிட்டிருக்கும் இந்த வசதியின் மூலம் கூகுள் பிளஸ் பயனர்களும் இனி தங்களுக்குள் குழுவை உருவாக்கி கொண்டு கருத்துக்களை பரிமாறி கொள்ள முடியும் மற்றும் Hangout எனப்படும் வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தி தங்கள் குழு உறுப்பினர்களுடன் பேசி கொள்ளலாம். மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

உருவாக்குவது எப்படி:
  • முதலில் உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் நுழைந்து இடது புறமாக உள்ள புதிய Communities என்ற ஐகானை கிளிக் செய்யவும் அல்லது இந்த லிங்கில் plus.google.com/communities கிளிக் செய்யவும்.
  • பிறகு Create a Community என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Public or Privacy என்பதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும். இதில் public தேர்வு செய்தால் உங்களுடைய குழு அனைவருக்கும் தெரியும், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தெரிய வேண்டுமென்றால் Privacy என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
  • அடுத்து உங்கள் குழுவின் பெயரை கொடுத்து கீழே உள்ள Create  Community என்ற பட்டனை அழுத்தவும். 
  • இப்பொழுது வரும் விண்டோவில் உங்கள் குழுவிற்கான Logo, Description சேர்த்து Done editing என்ற பட்டனை அழுத்தவும். 
  •  அவ்வளவு தான் உங்களுக்காக குழு உருவாக்கப்பட்டு விடும் பின்பு உங்கள் குழுவை உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 
மற்றும் உங்கள் Community-ல் உள்ள மற்றொரு நண்பருக்கும் அட்மின் வசதியை தர விரும்பினால் இந்த லிங்கில் Enable Admin Rights to Others சென்று எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.