Showing posts with label Gmail Tips. Show all posts
Showing posts with label Gmail Tips. Show all posts

Saturday, 9 March 2013

ஜிமெயிலில் புதிய Compose Window ஆக்டிவேட் செய்ய?

இதுவரை மெயில் டைப் செய்யும் பொழுது மற்ற மெயில்களை பார்க்க வேண்டுமானால் அதை டிராப்டில் சேமித்து இன்பாக்ஸ் பகுதிக்கு வந்து மெயிலை படித்து பின்பு மறுபடியும் ட்ராப்டில் சேமித்து உள்ள மெயிலை திறந்து வேலையை தொடர வேண்டும் இதனால் உங்களுடைய பொன்னான நேரம் தான் விரயம் ஆகும்.

ஜிமெயிலில் வாசகர்களுக்காக புதிய வகையில் Compose விண்டோ உருவாக்கி இருக்கிறார்கள். இந்த புதிய compose விண்டோ chat box போன்றே இருக்கும் இதன் மூலம் நாம் ஏதேனும் ஈமெயில் டைப் செய்து கொண்டிருக்கும் பொழுதே மற்ற மெயில்களை ஓபன் செய்து பார்க்கலாம் அல்லது ஏதேனும் புதிய மெயில் வந்தால் உடனே அறிந்து கொள்ளலாம். மற்றும் ஒரே நேரத்தில் நிறைய compose விண்டோ திறந்து கொள்ள முடியும். இந்த புதிய வசதியினால் வீணாகும் நேரத்தை சேமிக்க முடியும். மேலும் அறிய இங்கு செல்லுங்கள்.


இந்த புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய :
  • உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Compose பட்டனை அழுத்துங்கள். 
  • உங்களுக்கு ஒரு புதிய விண்டோ வரும் அப்படி வரவில்லை எனில் compose பகுதியில் உள்ள new compose experience என்பதை கிளிக் செய்யவும். 
  • அடுத்து கீழே இருப்பதை போல ஒரு கருமை நிற விண்டோ வரும் அதில் உள்ள Got it என்ற பட்டனை அழுத்துங்கள். 
  • Got It பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு புதிய compose pop-up விண்டோ வந்திருக்கும். 
இனி மற்ற மெயில்களை பார்த்து கொண்டே மற்றவர்களுக்கு ஈமெயில் அனுப்பலாம். ஒருவேளை இந்த புதிய compose விண்டோ பிடிக்கவில்லை எனில் மறுபடியும் பழைய compose விண்டோ வர வைக்க கீழே படத்தில் காட்டப்பட்டுள்ள அம்பு குறி மீதி கிளிக் செய்து அதில் வரும் Switch back to old Compose என்பதை கிளிக் செய்தால் பழைய ஸ்டைலுக்கு மாறிவிடும்.
இந்த தகவல் பிடித்து இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

கூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி?

பேஸ்புக்கில் உள்ள குரூப் வசதி பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். பேஸ்புக் நண்பர்கள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து கொண்டு கருத்துக்களை பரிமாறி கொள்ள உதவுவது பேஸ்புக் குரூப் வசதியாகும்.
தற்பொழுது இந்த குரூப் வசதி கூகுள் பிளஸ் சமூக இணையதளத்திலும் அறிமுக படுத்தி உள்ளனர். Community என்று பெயரிட்டிருக்கும் இந்த வசதியின் மூலம் கூகுள் பிளஸ் பயனர்களும் இனி தங்களுக்குள் குழுவை உருவாக்கி கொண்டு கருத்துக்களை பரிமாறி கொள்ள முடியும் மற்றும் Hangout எனப்படும் வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தி தங்கள் குழு உறுப்பினர்களுடன் பேசி கொள்ளலாம். மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

உருவாக்குவது எப்படி:
  • முதலில் உங்கள் கூகுள் பிளஸ் கணக்கில் நுழைந்து இடது புறமாக உள்ள புதிய Communities என்ற ஐகானை கிளிக் செய்யவும் அல்லது இந்த லிங்கில் plus.google.com/communities கிளிக் செய்யவும்.
  • பிறகு Create a Community என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Public or Privacy என்பதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும். இதில் public தேர்வு செய்தால் உங்களுடைய குழு அனைவருக்கும் தெரியும், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தெரிய வேண்டுமென்றால் Privacy என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
  • அடுத்து உங்கள் குழுவின் பெயரை கொடுத்து கீழே உள்ள Create  Community என்ற பட்டனை அழுத்தவும். 
  • இப்பொழுது வரும் விண்டோவில் உங்கள் குழுவிற்கான Logo, Description சேர்த்து Done editing என்ற பட்டனை அழுத்தவும். 
  •  அவ்வளவு தான் உங்களுக்காக குழு உருவாக்கப்பட்டு விடும் பின்பு உங்கள் குழுவை உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 
மற்றும் உங்கள் Community-ல் உள்ள மற்றொரு நண்பருக்கும் அட்மின் வசதியை தர விரும்பினால் இந்த லிங்கில் Enable Admin Rights to Others சென்று எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.

Friday, 21 December 2012

கணினியில் வைரஸ்களை துல்லியமாக கண்டறிந்து அழிக்க மைக்ரோசாப்டின் புதிய இலவச மென்பொருள்


இன்றைய சூழலில் கணினி இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. பத்து பேர் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரே ஒரு கணினி வைத்து கொண்டு அந்த வேலையை ஒரு நபர் பத்து நிமிடத்தில் செய்து முடிப்பதால் உலகளவில் கணினியின் ஆதிக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாகும்.  கணினி இயங்க முக்கிய தேவைகளில் ஒன்று ஆப்பரேட்டிங் சிஸ்டம். இது தான் ஒரு கணினியின் அடித்தளம். இதில் சிறந்து விளங்குவது விண்டோஸ் எனப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகும்.  இது பிரபல கம்ப்யுட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டால் உருவாக்கப்பட்டது. எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும்போதோ, ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ, அல்லது usb டிரைவ் மூலமாகவோ நம்மை அறியாமலே வைரஸ் நம் கணினியில் புகுந்து நம் கணினியில் புகுந்து நாம் கணினியில் விதிர்க்கும் டேட்டாக்களை முடக்கி கடைசியில் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது. 

நாம் கணினியில் என்னதான் ஆண்டி வைரஸ் போட்டிருந்தாலும் புதிய வைரஸ்கள் அவைகளை ஏமாற்றி நம் கணினியில் புகுந்து விடுகிறது. இது உலகளவில் உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும். இவைகளை கருத்தில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது Safety Scanner என்ற மென்பொருளை உருவாக்கி பயன்பாட்டிற்கு விட்டுள்ளது. 

பயன்கள்: 
  • இது 100% இலவச மென்பொருளாகும். மென்பொருளின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இதனை இலவசமாக இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. 
  • இது ஒரு போர்டபிள் மென்பொருளாகும்.
  • ஏற்கனவே நம் கணினியில் ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவி இருந்தாலும் இந்த மென்பொருள் வேலை செய்யும். ஆகவே பழைய ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை நீக்க வேண்டியதில்லை.
  • இது வைரஸ் மட்டுமல்லாது கணினியில் உள்ள மால்வேர்,ஸ்பைவேர் ஆகியவைகளையும் கண்டறிந்து நீக்குகிறது. 
  • இந்த மென்பொருளை விண்டோஸ் XP முதல் அதற்கடுத்து வந்த விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய கணினிகளில் பயன்படுத்தலாம்.

டவுன்லோட் முறை:
  • இந்த மென்பொருளை சுலபமாக டவுன்லோட் செய்யலாம். இதற்க்கு முதலில் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்துங்கள். 
  • இந்த மென்பொருள் 67mb அளவுடையது.
  • முதலில் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • படத்தில் காட்டியுள்ள படி download Now என்ற அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போன்று இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்.
  • இதில் உங்கள் கணினியின் பதிப்பை க்ளிக் செய்தால் போதும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் டவுன்லோட் ஆகும். 
  • டவுன்லோட் முடிந்தவுடன் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
டிஸ்கி 1: இந்த மென்பொருள் 10 நாட்கள் வரை உபயோகத்தில் இருக்கும். பின்னர் செயல் இழந்து விடும். இதை மீண்டும் ஆக்டிவேட் செய்ய இந்த மென்பொருளை திரும்பவும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். 

டிஸ்கி 2: இந்த மென்பொருள் செயல்பாடு அனைவருக்கும் பிடித்துள்ளதா என கண்டறியவே இது போன்று வைத்துள்ளனர். இரண்டாவது முறை  இந்த மென்பொருளை எவ்வளவு பேர் டவுன்லோட் செய்கிறார்கள் என்பதை பொறுத்தே இந்த மென்பொருளின் தரம் நிர்ணயிக்கப்பட இருக்கிறது. டவுன்லோட் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மேலும் பல மாற்றங்கள் செய்து வெளியிடலாம்.