Saturday, 15 October 2011

82 ஒப்பன் சோர்ஸ் மென்பொருட்களில் தொகுப்பு.


கணனிக்கு தேவையான அனைத்து இலவச மென்பொருட்களைய்ம் ஒவ்வொன்றாக இணையத்தில் தேடி எடுத்து டவுண்லோட் செய்வதை விட மிக உபயோகமானதாக கருதப்படும் 82 மென்பொருட்களின் தொகுப்பாக
அதன் ஆகப் பிந்திய பதிப்புக்களை டவுண்லோட் செய்ய வசதி செய்து கொடுக்கும் ஒரு சிறிய டூல் zeuapp ஆகும்.
இதன் மூலம் தேவையான மென்பொருளை டவுண்லோட் செய்யவோ அல்லது அதன் தளத்திற்கு செல்லவோ முடியும். அனைத்து மென்பொருட்களையும் குறிப்பிட்ட பால்டரில் சேமிக்கவும் முடிகிறது. டவுண்லோட் ஆனதும் தானகவே இன்ஸ்டோல் செய்வதற்கும் ஆரம்பித்துவிடும்.

பத்து பிரிவுகளில் தனித்தனியாக ஒப்பன் சோர்ஸ் மென்பொருட்கள் மட்டுமே லிஸ்ட் செய்யப்படுகிறது. விண்டோஸ் 7 இலும் இயங்க வல்லது.

கண்டிபாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.





நீங்கள் புதிதாக இணைந்தால் உங்களுக்கு ஒரு பதிவு படிவம் கிடைக்கும் . அதில் Personal கணக்கை துவங்கி படிவத்தை பூர்த்தி செய்தால் PayPal கணக்கு துவங்கப்பட்டு விடும்.
உங்கள் ஈமெயில் முகவரி தான் உங்கள் PayPal ID . இனி online payment கள் வாங்க உங்கள் paypal ID கொடுத்தால் போதும். பணம் உங்கள் PayPal கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.
paypal தளத்தில் உள்ள ControlPanel உங்கள் Bank account-டை paypal உடன் இணைக்கும் option னை கொண்டிருக்கும். இணைத்தால் பணத்தை நேரடியாக வங்கி கணக்கிற்கு எடுத்து கொள்ளலாம்.
கமிஷன் ரூபாய் 50 மட்டும் PayPal எடுத்துக்கொள்ளும்.
நான் SBI மட்டுமே பயன்படுத்தியுள்ளேன். மற்ற வங்கிகளுக்கு எவ்வளவு கமிஷன் என தெரியாது….
இது போல தான் Alert Pay Online payment Gateway ஆகும் .

படங்களின் அளவுகளை(Capacity) சுருக்குவதற்கான பயனுள்ள இலவச மென்பொருள்.



நண்பர்களுக்கு எங்கள் படங்கள்,புகைப்படங்களை (Images,Photos) மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறுவழியிலோ பகிர்ந்துகொள்ளும்போது அவை மிகப்பெரிய அளவுகளில் இருந்தால் எம்மால் சிலவேளைகளில் பகிர்ந்துகொள்ளவோ அனுப்பவோ முடியாதநிலை ஏற்படும். அத்தகைய இடையூறுகளை தவிர்த்துக் கொள்வதற்கென பிரத்தியேகமாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
மிகப்பெரிய அளவிலான (Capacity) படங்களின் அளவுகளை அவற்றின் தன்மை மாறாமல் (Resolution) மிகக் குறைந்தளவில் படங்களை, புகைப்படங்களை சுருக்கிக்கொள்ளலாம்.  RIOT (Radical Image Optimization Tool) எனப்படும் இந்த மென்பொருளானது 1MB க்கும் குறைவான அளவில் கிடைப்பதால் மிக இலகுவாக தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளலாம். உங்கள் தேவைக்கேற்ப சுருக்கும் படங்களின் அளவுகளை நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.  படங்களின் அளவுகளை சுருக்குவதற்கான திறன்வாய்ந்த பயனுள்ள மென்பொருள்.
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: RIOT

நண்பர்களுக்கு எங்கள் படங்கள்,புகைப்படங்களை (Images,Photos) மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வேறுவழியிலோ பகிர்ந்துகொள்ளும்போது அவை மிகப்பெரிய அளவுகளில் இருந்தால் எம்மால் சிலவேளைகளில் பகிர்ந்துகொள்ளவோ அனுப்பவோ முடியாதநிலை ஏற்படும். அத்தகைய இடையூறுகளை தவிர்த்துக் கொள்வதற்கென பிரத்தியேகமாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
மிகப்பெரிய அளவிலான (Capacity) படங்களின் அளவுகளை அவற்றின் தன்மை மாறாமல் (Resolution) மிகக் குறைந்தளவில் படங்களை, புகைப்படங்களை சுருக்கிக்கொள்ளலாம்.  RIOT (Radical Image Optimization Tool) எனப்படும் இந்த மென்பொருளானது 1MB க்கும் குறைவான அளவில் கிடைப்பதால் மிக இலகுவாக தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளலாம். உங்கள் தேவைக்கேற்ப சுருக்கும் படங்களின் அளவுகளை நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.  படங்களின் அளவுகளை சுருக்குவதற்கான திறன்வாய்ந்த பயனுள்ள மென்பொருள்.
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: RIOT

உங்கள் இணையத்தின் வேகம் !!!!!



பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் Condition-களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், நம்மிடம் வாங்கும் கட்டணத்திற்கேற்ற வேகத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்று இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை நாம் கணக்கிட்டுப் பார்த்து அறிய வேண்டும். இதனை எந்த வழியில் அறியலாம் என்று பார்க்கலாம்.
உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய  www.speedtest.net என்ற தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான Router-ருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்துகாட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.
தளத்திற்கு சென்றவுடன் Begin Test என்பதை Click செய்யவும்
உங்கள்  இணைய வேகம் அடங்கிய தகவல்கள் இப்படி கிடைக்கும்
அடுத்ததாக, நீங்கள் இன்டர்நெட் இணைப்பு பெற்று சில ஆண்டுகள் கழிந்திருந்தால், உங்களிடம் முதன் முதலில் கொடுத்த பிராட்பேண்ட் மோடம் தான் இருக்கும். இணைப்பு தரும் நிறுவனத்திடம், தற்போது அதிக வேக இணைப்பு மோடம் இருந்தால், ஒன்று உங்கள் இணைப்பிற்கென கேட்டுப் பெறவும். இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் அடிப்படை இயக்க சாதனங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது போல புதுப்பித்துத் தருவதில்லை; அது குறித்த தகவல்களைக் கூடத் தருவதில்லை.

இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன்படுத்த

கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுக படுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான ஈமெயில் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மெயில் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணினியில் இணைய இணைப்பு துண்டிக்க பட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் லேப்டாப்பில் இணைய இணைப்பு இருக்காது அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது. ஆப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மெயில்களை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மெயில் அனுப்பலாம் மற்றும் ஆன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமலே செய்யலாம். இதற்க்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும். அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.
  • இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய டேப்(tab) உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tab உருவாக்குங்கள்.
  • இப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.
  • உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow Offline Mail என்பதை தேர்வு செய்யவும்.

  • இந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்களின் ஈமெயில் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் ஆப்லைனில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள்.
  • அவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் ஈமெயில் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து மெயில்களும் காட்டும்.
  • இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மெயில்களும் காட்டும் அந்த மெயிலுக்கு நீங்கள் Reply போடலாம், அல்லது அந்த மெயிலை அப்படியே Forward செய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மெயிலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே.
  • மற்றும் ஆன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam,Print, Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஆப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
  • மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது கீழே பாருங்கள்.
  • இதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.

Thursday, 6 October 2011

எக்ஸெல் ஷார்ட்கட் கீகள்

காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O)அழுத்தவும்.

எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.

ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.

ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.

என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.

ஜிமெயிலில் சிக்கலா?

இன்று உலக அளவில் இமெயில் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயிலில் அக்கவுண்ட் வைத்து பயன்படுத்தி வருகின்றனர். அதனை மட்டுமே நம்பி இருப்போர் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர்.

அதனை அவ்வளவாகப் பயன்படுத்தாதவர்களும், ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை வைத்து எப்போதாவது பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஜிமெயில் சர்வீசஸ் திடீரென முடங்கிப் போனால், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் பதறிப் போய்விடுவார்கள்;

அது சரியாகிக் கிடைக்கும் வரை புலம்பித் தவித்துவிடுவார்கள். ஆனால் கூகுள் மெயிலை வேறு சில வழிகளிலும் பெறலாம் என்பதைப் பலர் அறிந்திருப்பதில்லை. இங்கு அந்த வழிகளைக் காணலாம்.

கூகுள் மெயில் மூன்று வழிகளில் இயங்குகிறது. அவை ஸ்டாண்டர்ட், எச்.டி.எம்.எல். மற்றும் மொபைல் (standard, HTML and mobile)ஸ்டாண்டர்ட் வகையில் எர்ரர் காட்டப்பட்டு பிரச்னை இருந்தாலும், மற்ற இரண்டு வகைகள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும்.

பெரும்பாலான நேரங்களில் ஸ்டாண்டர்ட் வகை தான் சிக்கலில் மாட்டிக் கொண்டு நமக்குக் கிடைக்காமல் இருக்கும். எனவே அந்த வேளைகளில் எப்படி மற்ற வகைகளில் ஜிமெயிலைப் பெறலாம் என்று பார்க்கலாம்.

முதலாவதாக எச்.டி.எம்.எல். வகையில் சென்று பெறுவது. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரிhttp://mail.google.com/mail/?ui=html இது ஸ்டாண்டர்ட் வகைக்கு மாற்றானதாக இருக்கும். படங்கள் ஏதுமின்றி மிகவும் சாதாரணத் தோற்றத்தில் கிடைக்கும்.

இந்த இணைய முகவரியை உங்கள் புக்மார்க் / பேவரிட் தளப் பட்டியலில் வைத்துக் கொண்டால், ஸ்டாண்டர்ட் ஜிமெயில் பிரச்னைக் குள்ளாகுகையில் இதனைப் பயன்படுத்தலாம்.

இரண்டாவதாக, கூகுள் மெயிலின் மொபைல் பதிப்பை நாடுவது. இது நம் மொபைல் போன்களுக்கானது. இதனை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பெறலாம். இதனைப் பெற உங்கள் பிரவுசரின் அட்ரஸ் பாரில் m.gmail.com என டைப் செய்திட வேண்டும்.

இதன் வடிவமும் எலும்புக் கூடு போலக் காட்சி அளிக்கும். ஆனால் இது டெக்ஸ்ட் மட்டுமே காட்டுவதால், விரைவில் உங்கள் மெயில்கள் கிடைக்கும். இதனைப் பார்த்து நீங்கள் அசௌகரியப்பட்டால், ஐபோனுக்கான கூகுள் மெயில் தளத்தினைப் பெறலாம்.

இதனைப் பெற http://mail.google.com/mail/x/gdlakb/gp/ / என்ற முகவரியினை டைப் செய்திடவும். இறுதியாக நமக்குக் கிடைக்கும் ஐகூகுள் (டிஎணிணிஞ்டூஞு) வசதி. நீங்கள் டிஎணிணிஞ்டூஞு பயன்படுத்தாதவராக இருந்தாலும் அதன் தளத்தின் மூலம் ஜிமெயில்களைப் பெறலாம்.

இன்னும் சொல்லப் போனால், ஐ கூகுள் தளத்தில் மூலம் நீங்கள் உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் முழுவதும் காண முடியும். ஜிமெயில் மட்டுமே பயன்படுத்தும் அனைவருக்கும் ஐ கூகுள் மிகச் சிறந்த தளமாகும். இதனைப் பெற http://www.google.com/ig/gmailmax என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். மேலே காட்டப்பட்டுள்ள நான்கு வழிகளிலும் நீங்கள் உங்கள் ஜிமெயிலைப் பெறலாம்.

சரி, இந்த நான்கு வழிகளிலும் பெற முடியவில்லை என்றால் என்ன செய்வது? உங்கள் டெஸ்க் டாப் மெயில் கிளையண்ட் புரோகிராம்களை நாடவேண்டியதுதான். போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் நமக்கு இந்த வகையில் உதவிடும்.

ஜிமெயில் சர்வரை இந்த புரோகிராம்கள் அணுகி, மெயில்களைப் பெற நிச்சயம் உங்களுக்கு இது உதவும். இதற்கு எப்படி செட் செய்வது என்ற வழியை http://mail.google.com/support /bin/answer.py?hl=en&answer=12103 என்ற முகவரியில் உள்ள கூகுள் தளம் உங்களுக்குப் படிப்படியாக விளக்கும். எனவே ஜிமெயில் என்றைக்கும் எப்போதும் கை கொடுக்கும் என்பதே இன்றைய நிலை

இணையத்தில் உள்ள 25 சிறந்த தேடியந்திரங்கள்(Search Engines)



நாம் இணையத்தில் இருந்து நமக்கு தேவையானதை தேடி பெற்றுக்கொள்ள இந்த தேடியந்திரங்கள் உதவி செய்கின்றன. இதில் நாம் அனைவருக்கும் தெரிந்தது கூகுள் மற்றும் யாகூ இந்த இரண்டையும் தான் நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம். ஆனால் இணையத்தில் நூற்றுகணக்கான தேடியந்திரங்கள் உள்ளன அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்து விளங்குகின்றன. இதில் முக்கியமானவைகளை மட்டும் கீழே தொகுத்து கொடுத்து உள்ளேன். 

Google  #1

இதை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை அனைவரும் அறிந்ததே. இணையத்தில் கேட்டதை கொடுப்பதில் இதற்கு இணை யாரும் இல்லை.
Click Here go to Website





Yahoo!   #4

கூகுளிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிகச்சிறந்த தேடு பொறியாகும். இவை தேடியந்திரங்கள் மட்டுமின்றி இலவச மெயில் சேவையையும் வழங்குகிறது.
Click Here go to Website





Bing   #25 

பிரபலம் வாய்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படும் தேடியந்திரமாகும். மிக வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டு வரும் தேடியந்திரமாகும். .
Click Here go to Website





Baidu #6

சீனாவின் மிகச்சிறந்த தேடு பொறியாகும். சீனாவில் கூகுளையே பின்னுக்கு தள்ளிய தேடுபொறியாகும்..
Click Here go to Website





Yandex #24

இது ரஷ்யாவின் பிரபலமான தேடு பொறியாகும்..
Click Here go to Website





Go.com #40

Directory மற்றும் Stock நிலைகளை அறிய உதவும் தேடு பொறியாகும். இலவச இமெயில் சேவைகளை தரும் நிறுவங்களை இந்த தேடியந்திரத்தில் சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
Click Here go to Website





Ask #5

இந்த தேடியந்திரம் மிக சிறந்த வசதிகளை கொண்டு இருந்தாலும் சமீப காலமாக இதன் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றனர்.
Click Here go to Website





Sohu #39

இதுவும் சீனாவின் பிரபலமான தேடு பொறியாகும்.
Click Here go to Website





AOL #49

கூகுளின் மூலம் முடிவுகளை தரும் தேடுபொறியாகும்..
Click Here go to Website





Technorati #890

பிளாக்குகளை தேடுவதற்காக பிரத்யோகமாக உள்ள தேடு பொறியாகும்.
Click Here go to Website





Lycos #1551

Ask நிறுவனத்தால் இயக்கப்படும் மற்றொரு தேடு பொறியாகும்.
Click Here go to Website





AltaVista #3366

யாகூ நிறுவனத்தை பின்பற்றி முடிவுகளை வெளியிடுகிறது.
Click Here go to Website





Dogpile #2891

மெட்டா கீவேர்டுகளை கண்டறிய உதவும் தேடுபொறியாகும். இந்த தளம் Infospace.Inc நிறுவனத்தால் இயக்க படுகிறது.
Click Here go to Website





My Excite #3494

மெட்டா தேடுபொறியாகும். Exite Web portal தளத்தின் ஒரு அங்கமாகும்.
Click Here go to Website





Infospace #1658

இந்த தளம் மட்டுமின்றி நாம் ஏற்க்கனவே பார்த்த Dogpiple தளமும் இவர்களுடையதே.
Click Here go to Website





All the Web #13653

யாகூ தளத்தினை அடிப்படையாக கொண்டு இயங்கு கிறது இந்த தளம்.
Click Here go to Website





Kosmix #8,355

இதுவும் ஒரு சிறந்த தேடியந்திரமாகும்.
Click Here go to Website





DuckDuckGo #10,411

இந்த தளம் விக்கிபீடியாவில் இருந்து தானாகவே பகுதிகளை சேகரித்து நமக்கு தருகிறது.
Click Here go to Website





Mamma #31,896

தேடியந்திரங்களில் இதுவும் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.
Click Here go to Website





blekko #3,013

சிறந்த டொமைன் பெயர்களை தேட இத்தளம் நமக்கு உதவி புரிகிறது.
Click Here go to Website





Yebol #226,115

மெட்டா கீவேர்டுகளை கண்டறிய உதவும் தேடுபொறியாகும். இந்த தளம் Infospace.Inc நிறுவனத்தால் இயக்க படுகிறது.
Click Here go to Website





Open Directory Project #483

Netscape தளத்தின் வெளியீடாகும்.
Click Here go to Website





AboutUs #1,456

ஒரு இணையதளத்தின் விவரங்களை கண்டறிய இத்தளம் நமக்கு பெரும் உதவி புரிகிறது.
Click Here go to Website





Business.com #2,478

இந்த தளம் தேடியந்திரமாகவும் மற்றும் Web directory ஆகவும் பயன்படுகிறது.
Click Here go to Website





Yahoo!Directory #4

யாகூ நிறுவனத்தின் மற்றொரு அங்கமாகும்.
Click Here go to Website





Best of the Web #4,531

நாம் கொடுக்கும் தலைப்புகளில் உள்ள இணையதளங்களை கண்டறிய இந்த தளம் பயன்படுகிறது.
Click Here go to Website