இந்தியச் சந்தையில் இரண்டு சிம் மொபைல் என்பது தரப்படுத்தப்பட்ட தேவை ஆகிவிட்ட நிலையில், நோக்கியா நிறுவனமும், இந்த சந்தையில் தன் இரண்டு சிம் மாடல்களை வெளியிட்டது. அவை, ராக்கெட் வேகத்தில் இங்கு விற்பனை யாவதாக, நோக்கியா நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.நோக்கியாவிற்கு முன்னரே, மேக்ஸ் மொபைல்ஸ், மைக்ரோமேக்ஸ், கார்பன் எனப் பல நிறுவனங்கள் அதிக அளவில் இரண்டு சிம் மாடல்களை வெளியிட்டு, விற்பனைச் சந்தையைப் பிடித்திருந்தாலும், நோக்கியாவின் போன்கள் வந்த பின்னர், அவை கணிசமான இடத்தைப் பெற்றுள்ளன. ஜூன் வரையிலான காலத்தில், நோக்கியா நான்கு இரண்டு சிம் மாடல்களை வெளியிட்டது. மியூசிக் போனாக நோக்கியா எக்ஸ்1-01, தொடுதிரையுடன் கூடிய ஸ்லைடர் போனாக, நோக்கியா சி2-03 மற்றும் நோக்கியா சி2-06, ஸ்டைலான மாடலாக நோக்கியா சி2 என அனைத்தும் இரண்டு சிம் இயக்க போன்களாக வந்தன. இவை அனைத்துமே, பட்ஜெட் விலை போனாக, சில அடிப்படை வசதிகளான, எப்.எம். ரேடியோ, அதிகப்படுத்தக் கூடிய மெமரி மற்றும் நீண்ட நாள் உழைக்கும் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருந்தன.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ-போன்கள் வருகையால், நோக்கியா நிறுவனம் உயர்நிலை போன்கள் சந்தையில் தன் இடத்தைச் சற்று இழந்திருந்தது. ஆனால், வரும் மாதங்களில், விண்டோஸ் போன், நோக்கியா 100 மற்றும் 101 மற்றும் பட்ஜெட் விலை டூயல் போன்கள் அறிமுகத்தால், இழந்த சந்தைப் பங்கு மீண்டும் கிடைக்கவுள்ளது.


No comments:
Post a Comment